நாளுக்கு நாள் புதிய உச்சம்.. ரூ.57,000ஐ நெருங்கிய தங்கம் விலை..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,960க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுவருவதே நிதர்சனம். மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதன்பின்னர் தான் தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது.

அதிலும் கடந்த சில வாரங்களில் கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,000ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து புதிய உச்சமாக 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,110க்கும், ஒரு சவரன் ரூ.56,880க்கும் விற்பனையானது. தொடர்ந்து இன்றைய தினமும் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,120க்கும், ஒரு சவரன் ரூ.56,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக வெள்ளி விலையும் இன்றய தினம் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 103 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ள்இ விலை நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டுவது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


