தயாளு அம்மாள் பிறந்தநாள் : கோபாலபுரம் வீட்டில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு..

 
தயாளு அம்மாள் பிறந்தநாள் : கோபாலபுரம் வீட்டில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு..

தயாளு அம்மாளின் பிறந்தநாளையொட்டி, அவரிடம் ஆசி பெற மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் கோபாலபுரம் வீட்டிற்கு வந்தனர்.  

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான  கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டிலேயே  வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக அவரவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.  இந்தநிலையில் இன்று தயாளு அம்மாள் அவர்களுக்கு 90-வது பிறந்தநாள். இதனையொட்டி கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

தயாளு அம்மாள் பிறந்தநாள் : கோபாலபுரம் வீட்டில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு..

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதி மாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். அவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி, தயாநிதி  ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  தயாளு அம்மாள் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் பேசி கொண்டனதாகவும், அவர்கள் இருவரும் ( மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும்) எப்போது சண்டையிட்டனர், சமாதானம் ஆவதற்கு? என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.