குவைத் நாட்டில் இந்திய தொழிலாளர்கள் மரணம் பெரும் துயரம் - சிபிஐ(எம்) இரங்கல்

 
K balakrishnan K balakrishnan

குவைத் நாட்டில் மங்காப் நகரில் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

tttt

குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்பு குறித்து தூதரகம் இன்னும் உறுதி செய்யவில்லை. குவைத் தீ விபத்தில் சிக்கியுள்ளவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று  அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். 


இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், குவைத் நாட்டின் மங்காப்  நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியான செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. இதில் 5 பேர் தமிழ் தொழிலாளர்களாக இருக்கலாம் என செய்திகள் கூறுகின்றன. தாங்கவொனாத் துயருக்கு ஆளாகியுள்ள தொழிலாளர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்  தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.