விசாரணை கைதி மரணம்- வனவர் மற்றும் வனக்காவலர் சஸ்பெண்ட்

 
s s

விசாரணை கைதி மரணம் தொடர்பாக வனச்சரகர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.மாரிமுத்து அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த ஜூலை 29ஆம் தேதி புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.மாரிமுத்து அவர்கள், குளியலறையில் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் அறிவித்த வனத்துறை, தற்போது மர்ம மரணம் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாரிமுத்துவின் மர்ம மரணத்தை தொடர்ந்து வனவர் நிமல் மற்றும் வனக்காவலர் செந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.