சென்னையில் அமைச்சர் ஜெகன்நாத் மரணம் -முதல்வர் ஸ்டாலின் சார்பில் மரியாதை

 
m

சென்னை தனியார் மருத்துவமனையில் ஜார்க்கண்டின்  ஆரம்பப்பள்ளி மற்றும் ஆயத்தீர்வு அமைச்சர்  ஜெகன்நாத் மாத்தோ சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சார்பில் மலர்வளையம் வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மரியாதை செலுத்தினார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் ஜெகன்நாத் .  2020 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.   கொரோனா காரணமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இன்று அவர் உயிரிழந்திருக்கிறார்.

ma

கிருதியில் உள்ள டும்ரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான ஜெகன்நாத் கடந்த மாதம் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டார்.  தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 இது குறித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்  இரங்கல் அறிவிப்பில்,   எங்கள் புலி ஜகன்நாத் இப்போது இல்லை.  ஜார்கண்ட் மாநிலம் ஒரு சிறந்த போராட்டக்காரரை,  கடின உழைப்பாளியை,  பிரபலமான தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டது . ஜெகன்நாத் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.  அவரின் ஆத்மா சாந்தியடையவும் இந்த இக்கட்டான நேரத்தில் துயரத்தை தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கவும் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ஜெகன்நாத் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.