முரசொலி செல்வம் மறைவு - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

 
ச் ச்

முரசொலி செல்வம் அவர்கள் கடந்த வாரம் வியாழக்கிழமை மாரடைப்பால் காலமான நிலையில் அவரது உடல் சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Image

இந்நிலையில், முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்று. பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். இதன் பின்னர் இல்லத்தைவிட்டு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ண்ண் புறப்பட்ட போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை வீட்டின் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.