வீரப்பனின் முக்கிய கூட்டாளி மீசை மாதய்யன் மரணம்

 
vee

சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளில் முக்கிய கூட்டாளியான மீசை மாதய்யன் உயிரிழந்தார் . பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.

தமிழக மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் சந்தன மரக் கடத்தல், யானை தந்த கடத்தல் , ஆள் கடத்தல் என்று பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் வீரப்பன். காவல் துறையில் பலரின் சாவுக்கு காரணமாக இருந்தவரும் வீரப்பன்.  கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தியதன் மூலம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.  அதிலிருந்துதான் வீரப்பனை பிடித்தே தீர வேண்டும் என்று தமிழக - கர்நாடக போலீசார் படு தீவிரமாக களம் இறங்கினர்.

ma

கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி அன்று தமிழக அதிரடி படையினரால் வீரப்பன் சுட்டுக்  கொல்லப்பட்டார்.  அதன் பின்னர் அவரது கூட்டாளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவர் மீசை மாதையன்.  இவர் 1993 ஆம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்தார்.  அதை தொடர்ந்து இவர் மீது நான்கு தடா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

 இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.  தூக்கு தண்டனையை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருந்தார் மீசை மாதையன்.  9 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது . ஆனாலும் உரிய காலத்தில் கருணை மனுவை பரிசீலனை செய்து முடிக்கவில்லை என்று தொடர்ந்த வழக்கில் மீசை மாதய்யன்  உட்பட நாலு பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது.

 இதன் பின்னர் கர்நாடக அரசு மாதய்யன்ப் உட்பட நாலு பேரையும் விடுவிக்கவில்லை.  அந்த நான்கு பேரில் கடந்த 2018 ஆம் ஆண்டில் சைமன் என்பவரும்,  2022 ஆம் ஆண்டில் பிலவேந்திரன் என்பவரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.  இன்னொரு குற்றவாளி ஞானப்பிரகாசம் கடந்த பிப்ரவரி மாதம் சிறுநீரக பிரச்சனையால் பரோல் மூலம் வெளியே வந்தார்.

 கடந்த 31 ஆண்டுகளாக மைசூர் சிறையில் இருந்த மாதய்யன்  உடல்நிலை மோசமானதை அடுத்து கடந்த 11ஆம் தேதி சுயநினைவை இழந்த பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.   சுயநினைவு திரும்பாமலேயே மாதய்யன் நேற்று மாலை உயிரிழந்தார்.  அவரின் உடல் இன்று சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட இருக்கிறது.