கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி மரணம்- உறவினர்கள் செய்த செயல்
மார்த்தாண்டம் அருகே இரண்டு பிள்ளைகளை உதறிவிட்டு கள்ளக்காதலுடன் சென்ற பெண் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் (41). இவருக்கும் கடையால் மூடு பகுதியைச் சேர்ந்த பிரின்சி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் வெளிநாட்டிற்கு கொத்தனார் வேலைக்கு சென்றார். அப்பொழுது இதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் அபினேஷ் (25) என்பவருக்கும் பின் சிக்கிம் இடையே பழக்கம் ஏற்பட்டு இது கள்ளக்காதலாக மாறி உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து மனைவிக்கு அனுப்பும் பணத்தில் பெரும் பகுதியை கள்ளக்காதலருக்கு பிரின்ஸி வழங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்த சுனில் குமார் லீவிற்காக ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு ஊருக்கு வந்த அடுத்த நாளை இந்த விவகாரம் சுனில் குமாருக்கு தெரிந்து அவர் தனது மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரின்சி தனது கள்ளக்காதலுடன் தலைமறைவானார். இது சொந்தமாக சுனில் குமார் மார்த்தாண்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் ராமேஸ்வரத்தில் இருப்பது கண்டறிந்து அவர்களை காவல் நிலையத்துக்கு வருமாறு அறிவுறித்தினர். காவல் நிலையத்திற்கு தனது கள்ளக்காதலுடன் வந்த பிரின்சி தன் காதலனுடன் செல்வேன் என உறுதியாக கூறியுள்ளார். தான் பெற்ற இரண்டு பிள்ளைகளும் தாயுடன் செல்லுவதாக கூறியதையும், அதை பொருட்படுத்தாமல் பிரிந்து தனது கள்ளக்காதலுடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இவர் மார்த்தாண்ட பகுதியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் படுத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனிக்காததால் அவர் உயிரிழந்தார். உடற்கூறு அறிவிக்க பிறகு கணவரின் வீட்டிற்கு இவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்த நிலையில் சுனில் குமாரின் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்காதலன் அபினேஷின் வீட்டில் பிரின்சியை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கள்ளக்காதலனை உடனே கைது செய்ய வேண்டும் என கூறியும் பெண்ணின் உடலுடன் மருதங்கோடு சாலையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய உடன்பாடு ஏற்படாததால் பிரின்சியின் உடலை மீண்டும் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் . ள்ளக்காதல் விவகாரத்தில் வெளிநாட்டில் கணவர் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கள்ளக்காதலனுக்கு வழங்கியதுடன் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் உதறிவிட்டு கள்ளக்காதலுடன் சென்ற பெண் மரணம் அடைந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.