அத்திப்பள்ளி பட்டாசு விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

 
athipalli

ஓசூர் அருகே அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்தார். இவர் தனது பட்டாசு கடைக்கு  கண்டெய்னர் வாகனத்திலிருந்து பட்டாசு பாக்ஸ்களை இறக்கும்போது எதிர்பாராத விதமாக தீப்பற்றி பட்டாசுகள் வெடித்து சிதறியது.  இந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். அத்திப்பள்ளியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்திப்பள்ளி பட்டாசு கடை உரிமையாளர் நவீன் ரெட்டி மற்றும் ராமசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடு, கவனக்குறைவு காரணமாக பட்டாசு கடையில் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த நிலையில், அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் வாணியம்பாடி வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.