ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வேதனை... என்எல்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

நெய்வேலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தியில் என்எல்சி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி 2-வது வட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(46). இவர் என்எல்சி மின்தடை பராமரிப்பு அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செந்தில்குமார், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில், அதிகளவு பணத்தை இழந்த நிலையில், பலரிடமும் கடன் பெற்று, அந்த பணத்திலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருக்கு பெரியளவு கடன் சுமை ஏற்பட்டுள்ளது.

police

மேலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதனால், செந்தில்குமார் கடந்த சில நாட்களாக அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், திங்கள் கிழமை இரவு தனது அறைக்கு தூங்க சென்ற அவர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது செந்தில்குமார், தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

தகவல் அறிந்த நெய்வேலி போலீசார், செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து செந்தில்குமாரின் மனைவி கனிமொழி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.