#JustIn முதியோர் உதவித்தொகையை ரூ.1200 ஆக உயர்த்த முடிவு!?

 
tn

முதியோர் உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்த அமைச்சரவையில் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

tn

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10:30 மணிக்குதொடங்கியது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது , ஆளுநரின் செயல்பாடுகள் , அமலாக்க துறையின் சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . அத்துடன் புதிய தொழில்கள் மற்றும் தொழில் விரிவாக்கம் ஆகியவற்றிற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

govt

இந்நிலையில் விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ஆயிரம் 1000ல் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை .