மேல்மருவத்தூர் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள புகாரில் அளவீடு செய்ய முடிவு - தமிழ்நாடு அரசு தகவல்

 
high court

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இ இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலானது சென்னை-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ,  சென்னை 92 கி.மீ மற்றும் விழுப்புரம் 54 கி.மீ தொலைவிலும் உள்ளது. 

tn

இந்த சூழலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.  6 ஏக்கர் நிலத்தை கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டதையடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

govt

இந்நிலையில் மேல்மருவத்தூர் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள புகாரில் அளவீடு செய்ய  தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேல்மருவத்தூர் கோயிலை ஒட்டிய நெடுஞ்சாலையும்,  நீர் நிலையும் அளவீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது . மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கல்யாண மண்டபம்,  பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏதேனும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.