பத்திரப்பதிவு கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்தது..

 
பத்திரப்பதிவு கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்தது..

பட்ஜெட்டில் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவுக் கட்டணக் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.              

தமிழ்நாட்டில் மொத்தம்  575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள்  மூலமாக  ஆண்டுக்கு 25 லட்சம் பத்திரப்பதிவுகள் நடக்கிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. அந்தவகையில் கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 12 ஆயிரம் கோடிக்கும்  மேல் வருவாய் கிடைத்தது.

பத்திரப்பதிவு

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட்டில், நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4 லிருந்து 2 சதவீதமாக குறைப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்திருந்தார். இதன்படி 2 சதவீத பத்திரப்பதிவுக் கட்டண குறைப்பு நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக  பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.  அதில், 2 % கட்டணக் குறைப்பு நேற்று முதல் ( ஏப்ரல் 1)  அமலுக்கு வருவதாக இது நிலம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.