தீபாவளிக்கு களைகட்டிய மது விற்பனை : இத்தனை கோடி வசூலா?

 
Tasmac

தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி கடந்த இரண்டு நாட்களில் ரூ. 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

tasmac

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மொத்த மற்றும் சில்லறை மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழக அரசுக்கு பெருவாரியான வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை கோடிக்கணக்கில் லாபத்தை ஈட்டித் தருகிறது.கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால்,  தமிழக அரசுக்கு வருவாய் குறைந்தது.  தற்போது கொரோனா குறைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் மற்றும் டாஸ்மாக் பார்கள் ஆகியவை திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

tasmac

இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரண்டு தினங்களில் ரூ. 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.98.89 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 79.84 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.கடந்த 3-ம் தேதி ரூ 205.61 கோடிக்கும், 4-ம் தேதி ரூ 225.42 கோடிக்கும் டாஸ்மாக்கில் மது விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.89.95, சேலம் மண்டலத்தில் ரூ.87.89 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த தீபாவளிக்கு ரூ 467.69 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்தாண்டு  431 கோடிக்கு  மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.