F4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம்
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கவில்லை. மேலும் சர்வதேச மோட்டார் அமைப்பு ஆய்வை முடிக்கவில்லை. பந்தய சாலையில் ஆய்வுப் பணியை இன்னும் முடிக்காததால் பயிற்சிப் போட்டி தொடங்கவில்லை. இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டி அட்டவணை தொடர்பான அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் F4 கார் பந்தயம் நடத்துவதற்கு FIA இதுவரை உரிமம் வழங்கவில்லை. இன்று தகுதி சுற்று போட்டிகள், பயிற்சி போட்டிகள் மற்றும் FIA சான்றித்ழ வழங்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.