டெல்லி முதல்வர் தேர்வு - பாஜக இன்று ஆலோசனை
Feb 19, 2025, 13:05 IST1739950551340
டெல்லி முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று (பிப்.19) ஆலோசனை நடத்துகின்றனர்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 05ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 வருடங்களுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததை அடுத்து டெல்லி முதல்வர் அதிஷி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜக புதிய அரசை அமைக்கவுள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று (பிப்.19) ஆலோசனை நடத்துகின்றனர். டெல்லி முதல்வராக பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா, ஆசிஷ் சூட் உள்ளிட்டோர் பெயர் பரிசீலனையில் உள்ளது. புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா நாளை நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


