கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

 
gk vasan

தனியார் உற்பத்தியாளர்கள் நலன் காக்க வரி விலக்கு, மானியம் அளிக்க முன்வர வேண்டும் என்று  ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மாநில அரசுகள் கைத்தறி பட்டு நெசவுத்தொழிலைப் பாதுகாக்க, கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த, தனியார் உற்பத்தியாளர்கள் நலன் காக்க வரி விலக்கு, மானியம் அளிக்க முன்வர வேண்டும்.மத்திய மாநில அரசுகள் கைத்தறி தொழிலை குடிசைத் தொழிலாக அங்கீகரித்துள்ளதால் அதனை உறுதிப்படுத்தும் விதமாக தொழிலைப் பாதுகாக்கும் விதமாக உதவிக்கரம் நீட்ட வேண்டும்.தமிழகத்தில் சுமார் 3 இலட்சம் கைத்தறிகள் மூலம் சுமார் 50 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளது.

GK Vasan

குறிப்பாக பட்டு மற்றும் நூல் கைத்தறி துணிகளாக கைலி, ஜமுக்காளம், துண்டு, பருத்தி பட்டு சாப்ட் சில்க்ஸ், வெண்பட்டு வேஷ்டிகள் போன்ற பலவகையான துணிகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 1,200 கோடி வரை உற்பத்தி செய்யப்பட்டுகிறது.ஆனால் கைத்தறி, பட்டு நெசவாளர்கள் கைத்தறித் தொழிலைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வைக்கின்றனர்.அதாவது கைத்தறி பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் புடவைகளுக்கு தேவைப்படும் கச்சாப்பட்டு, ஜரிகை, பாலிஸ்டர், நூல் ரகத்திற்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்.கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 கோடிக்கு மேல் பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளதால் தேக்கமடைந்துள்ள பட்டு சேலைகளுக்கு தமிழக அரசின் கைத்தறித்துறை 35 % தள்ளுபடி மான்யம் வழங்க வேண்டும்.

gk

பட்டு சேலை உற்பத்திக்கு மூலப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், பட்டு சேலைகளின் விலை குறைவதற்கும், நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் ஏதுவாக தமிழக அரசு உச்சவரம்பின்றி 20 % தள்ளுபடி மான்யம் வழங்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கும், தனியார் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், சிறுபட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், டான் சில்க் மூலம் வழங்கப்படுகின்ற கச்சாப்பட்டு விலை உயர்வின் காரணமாக பட்டு சேலைகளின் விற்பனை விலை மிகவும் அதிகரிக்கப்படுவதால் தற்பொழுது தேசிய பட்டு கைத்தறி வளர்ச்சி கழகத்தின் மூலம் வழங்கப்படுகின்ற மான்ய தொகை 15 % லிருந்து 30 % மாக உச்சவரம்பின்றி உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். எனவே மத்திய மாநில அரசுகள் கைத்தறி பட்டு தொழிலைப் பாதுகாக்க, கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த, உற்பத்தியாளர்களின் நலன் காக்க, வரி விலக்கில் கவனம் செலுத்தி கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.