டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை
டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மதுரவாயலில் சிறுவன் ஒருவன் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார் . நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில் , டெங்கு பரவுவதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன என்றும், சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .