சென்னையில் உள்ள 3 மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் தனி வார்டு!

 
rajiv gh

சென்னையில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏடிஸ் எனப்படும் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.  சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.  சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 20 முதல் 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 

dengue

இந்த நிலையில், சென்னையில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சை தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வார்டி அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தினமும் கஞ்சி, உப்பு சர்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.