கொரோனாவை விட வேகமாக பரவும் டெங்கு - அதிர்ச்சி தரும் தகவல்!!

 
dengue

இந்தியாவில் கொரோனா  படிப்படியாக குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் வேகம் எடுத்து வருகிறது . இந்தியாவில் 11 மாநிலங்களில் டெங்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு டெங்கு வைரஸ் புதிய மாற்றத்தை அடைந்திருப்பதே  காரணம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் டெங்கு மற்றும் கொரோனா  இரண்டிற்குமான அறிகுறிகளைக் கண்டறிவது சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில் டெங்கு வேரியன்ட் மற்றும் கொரோனா வேரியன்ட்  இரண்டும் ஒரே அறிகுறிகளைக் கொண்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 11 மாநிலங்களில் டெங்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் கொசு உற்பத்தி என்பது அதிகரிக்கும். பருவமழை தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சலின் தாக்கம் கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

dengue

 DENV-2, அல்லது D2 வேரியன்ட் தற்போது புழக்கத்தில் உள்ளது. இது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிக உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.  டிஎன்வி நோய்த்தொற்றின் மாறுபாடுகள், கோவிட் -19 போன்றது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. டெங்கு நோய்த்தொற்று என்பது கொசுக்களின் கடித்தால் பரவுகின்றன . கொரோனாவைப் போல் பாதிக்கப்பட்ட நபரின் சுவாசத் துளிகள் மூலம் பரவுவதில்லை.

காய்ச்சல், சளி, இருமல், சளி, தொண்டை புண், மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி,  சோர்வு ஆகிய  அறிகுறிகள் டெங்கு காய்ச்சல்  அறிகுறிகளாகும். இதனால் பொதுமக்கள் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக செய்வது என்பது நல்லது. 

dengue

தமிழகத்தைப் பொருத்தவரை கடலூர் ,திருச்சி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை மூன்று பேர் டெங்குவால் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 375 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் மாவட்டம்தோறும் தினமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் ,திருச்சி, கடலூர் போன்ற பகுதிகளில் பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர், இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.