ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.194 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!!

 
tn

 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ரூ.194 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (27.12.2023) சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 32.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், விடுதிகள் மற்றும் சமுதாயநலக்கூடத்தை திறந்து வைத்து, ரூ.138 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

tn

மேலும், 194 கோடி ரூபாய் மதிப்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதியம், பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டிற்கான தொழில் முனைவு பழங்குடியினர் சமூக, பொருளாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் கடனுதவிகள், பழங்குடியினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள் வழங்குதல், உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை. கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.