இன்ஸ்டாகிராம் விளம்பரம் - ஏமாந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
c

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைனில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தைக் கட்டி ஏமாந்து விட்டதால் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் கல்லூரி மாணவி.  சென்னையில் ஏழு கிணறு பகுதியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 சென்னை ஏழு கிணறு பகுதியில் போர்த்துக்கீசியர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்.   இவரின் மனைவி சாந்தி .  இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் . கருத்து வேறுபாட்டால் சாந்தியும் அருண்குமாரும் பிரிந்து வாழ்கிறார்கள்.  மகள்களுடன் சாந்தி வாழ்ந்து வருகிறார். 

s

 19 வயது மகள் மகாலட்சுமி சென்னை தனியார் கல்லூரியில் பி. காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் .   இவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.   30 ஆயிரம் வரைக்கும் பணத்தை கட்டி இழந்திருக்கிறார்.  இதை அறிந்த சாந்தி குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி பணத்தை கட்டி இழந்து விட்டாயே என்று  கடும் ஆத்திரப்பட்டிருக்கிறார்.   இதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் மகாலட்சுமி. 

நேற்று காலையில் அவர் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   சம்பவம் குறித்து அறிந்த முத்தியால்பேட்டை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் பணத்தை இழந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏழுகிணறு பகுதியினரிடையே  சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.