துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..! விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை ..!
Jun 12, 2025, 07:15 IST1749692710000
விடுபட்ட மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்த வகையில், அதற்கான முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், மகளிர் உதவித்தொகை தரும் தேதியும் அறிவிக்கப்படும் என்றும்," அவர் தெரிவித்தார். "சென்ற முறை எப்படி சரியாக மகளிர் உதவித்தொகை வழங்கப்பட்டதோ, அதேபோல் இந்த முறையும் விடுபட்டவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும்," அவர் உறுதியளித்தார்.
இதனால், விடுபட்ட மகளிர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


