மொழிப்போர் தியாகிகள் புகழ் ஓங்கட்டும் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

 
udhayanidhi Stalin

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

தமிழ்நாட்டுக்குள் நுழைய ஓயாது ஓலமிட்டு வந்த இந்தியைத் தங்கள் இன்னுயிரைக் கொடுத்துத் தடுத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள் இன்று! கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரானப் போர்க்களத்தில் சிறைப்பட்டு மாண்ட மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன் ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ள சென்னை மூலக்கொத்தளத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுடன் நாமும் மரியாதை செலுத்தினோம்.

இத்தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்த நம் முதலமைச்சர் அவர்களே உணர்ச்சித் ததும்ப வீரவணக்க முழக்கமிட்டது, நம் லட்சியப்பாதையின் உறுதிக்கு சான்று. தாளமுத்து – நடராசன் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து, மொழிப்போர் வீராங்கனை டாக்டர் தருமாம்பாள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். மொழிப்போர்_தியாகிகள் புகழ் ஓங்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். 


 

News Hub