என்ன ஆச்சு துணை முதல்வர் உதயநிதிக்கு?? அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..

 
udhayanidhi udhayanidhi


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும்  பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது,  துறைசார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சிகளில் பங்கேற்பது என நாள்தோறும் பிஸியாக இருந்து வருகிறார். நேற்றைய தினம் கூட மதுரையில் நடைபெற்ற திமுக  பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

udhai

 இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் , அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.  அதனால் துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Image