பாசிசவாதிகளிடம் இருந்து இந்தியாவைக் காப்போம் - உதயநிதி ஸ்டாலின் பதிவு!

 
Udhayanidhi Udhayanidhi

அண்ணல் கொடுத்த அரசியல் சட்டத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை தடுப்போம், பாசிசவாதிகளிடம் இருந்து இந்தியாவைக் காப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ஒன்றிய விளிம்பு நிலை சமூகங்களின் விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று. ‘கற்பி - ஒன்று சேர் - புரட்சி செய்’ என்று அறிவுப் பரவலின் மகத்துவத்தையும், ஒற்றுமையின் அவசியத்தையும், உரிமைக்கான போர்க் குரலையும் முழக்கமாக தந்த சட்டமேதையின் பணிகளைப் போற்றிடுவோம்.இந்தியாவில் ஜனநாயகத்தையும் - சமூக நீதியையும் நிலைநாட்டிட அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம்!


ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில் அரசியல் சட்டம் தான் அடித்தட்டு மக்களின் ஆறுதல். அண்ணல் கொடுத்த அரசியல் சட்டத்தின் மீது தொடுக்கப்படும்  தாக்குதலைத் தடுப்போம், பாசிசவாதிகளிடம் இருந்து இந்தியாவைக் காப்போம் என குறிப்பிட்டுள்ளார்.