ஒசூர் காப்புக்காடுகளை தூர்வார ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..
ஓசூர் கோட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பலப்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த போது வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர் நிலைகள் தூர்வாரும் திட்டம் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய நீர் நிலைகளை தூர்வார தற்போது அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஓசூர் கோட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பலப்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு அதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது