ராமதாஸ் எதிர்ப்பையும் மீறி, திட்டமிட்டபடி இன்று நடைபயணத்தை தொடங்கும் அன்புமணி..!
ராமதாஸ் எதிர்ப்பையும் மீரி திருப்போரூரில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்குகிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு மீட்டுக்கொடுக்க வேண்டி புதிய பிரச்சார பயணத்தை தொடங்குகிறார்.

இன்று ( ஜூலை 25) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்த பிரச்சார பயணத்திற்கான லட்சியனையையும், பாடலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடுக்கவேண்டும் என்றும், இந்த பயணத்தின் போது பாமக என்னும் கட்சியின் பெயரையோ, கட்சிக் கொடியையோ அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என நேற்று டிஜிபியிடம் மனு அளித்திருந்தார். ஆனால் அன்புமணி, மருத்துவர் ராமதாஸின் எதிர்ப்பையும் மீறி இன்று திட்டமிட்டபடியே தனது நடைப்பயணத்தை தொடங்குகிறார். இதனையொட்டி திருப்போரூரில் ராமதாஸின் பெயர் இடம்பெறாமல் பேனர்களும், போஸ்டர்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.


