தை மாத பிரதோஷம் - சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

 
sathuragiri

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

sathuragiri

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

sathuragiri

இந்நிலையில் தை மாத பிரதோஷம் , பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரை மலையேற அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மலைப்பாதை மற்றும் கோயிலில் பொதுமக்கள் வசதிக்காக மருத்துவ முகாம்கள் ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.