தமிழ்நாட்டில் புதிதாக 1,000 காவலர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்- டிஜிபி சைலேந்திரபாபு

 
dgp

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரம் காவலர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

DGP

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் திருட்டு போய் மீட்கப்பட்ட ஒன்றரை லட்சம் கிலோ தங்கம், 300 செல்போன்கள், 50 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “நாளைய சர்வதேச போதை ஒழிப்பு நாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் 70 லட்சம் மாணவர்கள் சென்றடையும் விதத்தில் விழிப்புணர்வு செய்தார்கள். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதை பொருள் விநியோகத்தை  குறைக்க 28 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டு 54 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போதை பொருள் வியாபாரிகளின் 80 கோடி ரூபாய் சொத்துக்கள முடக்கம் செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

282 காவல் நிலைய எல்லைகளில் போதை பொருள் இல்லை என கூறியுள்ளார்கள். போதை பொருள் ஒழிப்பில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால்  போதை பொருட்களின் நடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மதுரை ஐஜி அஸ்ரா கார்க், கோவை எஸ்பி பத்ரி நாராயணன், தேனி எஸ்பி பிரவீன் குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிக்கு அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு முதல் பதக்கப் வழங்கப்படுகிறது. 

dgp sylendra babu

பெண்களுக்கு பாதுகாப்பிற்கான திட்டம் முதல்வர் துவங்கி வைத்தார்கள். அது பொதுமக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை. அதனால் புதிதாக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல் உதவி என்னும் செயலியை தமிழகத்தில் அனைத்து பெண்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தமிழ்நாடு காவல்துறையில் காவலர்கள் பற்றாக்குறை இல்லை. தமிழ்நாட்டில் 2001-ஆம் ஆண்டு பத்தாயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது 3700 காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதைப் போன்று 444 உதவி ஆய்வாளர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர் . அவர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள். தற்போது  600 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்படுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.