தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு தினகரன் வாழ்த்து

 
TTV

தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். 

Image

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , 69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கடைசி விவசாயி திரைப்பட குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

மேலும் "இரவின் நிழல்" படத்தின் மூலம் சிறந்த பின்னணிப் பாடகி விருதை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல், "கருவறை" ஆவணப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ள ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வாகியுள்ள "சிற்பங்களின் சிற்பங்கள்" படக் குழுவினர் உட்பட தேசிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.