ஓணம் பண்டிகையையொட்டி தினகரன் வாழ்த்து

 
ttv ttv

ஓணம் பண்டிகையையொட்டி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடையாளமாக திகழும் அறுவடைத் திருநாளான  பொன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Onam
    அரசனோ அரக்கனோ யாராக இருந்தாலும்  ஆணவத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை  மகாபலி சக்ரவர்த்தியின் வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. மக்கள் மீது அதீத அன்பு கொண்டிருந்த மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வரும் இந்த திருநாள் அன்பு, ஒற்றுமை, சகோதர உணர்வு மட்டுமே நம்மை வலிமைப்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகிறது.

    மாநிலத்திற்கு மாநிலம் பேசும் மொழி வெவ்வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு ஒன்று பட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடுவோம். 

TTV
    கேரள மக்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் அறுவடைத் திருநாளான ஓணம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் விதைக்கட்டும். சாதி மதங்களை கடந்து அனைவரும் சமூக நல்லிணக்கதோடு சகோதரர்களாக வாழ இந்நாளில் உறுதியேற்போம்." என்று குறிப்பிட்டுள்ளார்.