குருநானக் ஜெயந்தி - சீக்கிய மக்களுக்கு தினகரன் வாழ்த்து

 
ttv

குருநானக் ஜெயந்தியொட்டி சீக்கிய மக்களுக்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சீக்கிய மதத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படும் குருநானக் ஜெயந்தி விழாவை கொண்டாடி மகிழும் சீக்கிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

தூய்மையுடன் கடவுளை வேண்டுவது, நேர்மையாக வாழ்வது, பிறருக்கு உதவுவது என்ற மூன்று போதனைகளை முன்னிறுத்தி, மூட நம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவாளராக திகழ்ந்த குருநானக் பிறந்தநாளில் அவர் முன்வைத்த போதனைகளை பின்பற்ற உறுதியேற்போம்.என்று குறிப்பிட்டுள்ளார்.