ஏசி வெடித்து 9 பேர் உடல் கருகி பலி- தலைநகரில் பயங்கரம்
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்து பயங்கர தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தார்.

டெல்லி விவேக் விஹாரில் உள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தின் பல மாடிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாவது மாடியின் பின்புறத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். அவர்கள் அரவிந்த் (60), அவரது மனைவி அனிதா ஜெயின் (58), அவர்களது மகன் நிஷாந்த் ஜெயின் (35), அவரது மனைவி அஞ்சல் ஜெயின் (33) மற்றும் அவர்களது 18 மாதக் குழந்தை ஆகாஷ் ஜெயின் ஆவர். முதல் மாடியில், நவீன் ஜெயினின் மனைவி ஷிகா ஜெயினும் (45) இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மூன்றாவது மாடியில் வசித்து வந்த நிதின் ஜெயின் (50), அவரது மனைவி ஷெய்லி ஜெயின் (48) மற்றும் அவர்களது மகன் சம்யக் ஜெயின் (25) உள்ளிட்ட மற்றொரு குடும்பமும் தீ விபத்தில் உயிரிழந்தது.
விபத்துதொடர்பாக அப்பகுதிவாசியான ரோஹித் கூறுகையில், "ஏசியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது... சுமார் 12-15 பேர் மீட்கப்பட்டனர். இருப்பினும், 4-5 பேரை இன்னும் காணவில்லை. அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து தொடங்கியது. அதிகாலை 3:35 மணியளவில் தீயணைப்பு வாகனங்கள் வந்தன.. தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

