“சொன்னீர்களே செய்தீர்களா..” திமுகவுக்கு விஜய் கேள்வி..!

 
Q Q

திருச்சியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது, “திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சொன்னீர்களே.. செய்தீர்களா..” என கேள்வி எழுப்பினார்.

 மின்கட்டண கணக்கீடு மாதாமாதம் செய்யப்படும் என்றீர்களே? செய்தீர்களா?

மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றீர்கள், செய்தீர்களா?

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றீர்களே? செய்தீர்களா?

டீசல் விலை குறைப்பு ரூ.3 குறைப்பு என்னும் வாக்குறுதி என்னவானது?

பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு, சொல்லிக் காட்டலாமா?

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீர்களே? செய்தீர்களா?

திருச்சி மக்களின் சப்தம் கேட்கிறதா முதல்வரே?

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?’’ என்று தவெக விஜய் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார். உடனே, ‘’மாட்டோம் மாட்டோம்’’ என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

 

 “பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் நோ காம்பரமைஸ். தவெக ஆட்சி அமைந்தால் நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம்.” என பேசினார்.

திருச்சி மரக்கடை பகுதியில் பரப்புரை நிறைவு பெற்றதையடுத்து அரியலூரில் பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் புறப்பட்டார்.