"கோடைக்கால துயரம் இப்பதான் தெரிஞ்சதா? - முதலமைச்சரை வறுத்தெடுத்த இபிஎஸ்!"

 
1 1

தமிழ்நாட்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, நடப்பு மாதத்துடனே சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுவதாகவும், அடுத்த 3 மாத உரிமைத் தொகையாக மூவாயிரம் ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசும்போது, "கடந்த 2022 முதல் 2025 வரையிலான ஆண்டுகளிலும் கோடைகாலம் வந்ததைக் குறிப்பிட்ட அவர், அப்போது மக்களுக்குத் தெரியாத கோடைகாலத் துயரம், தேர்தல் நடைபெறுகின்ற இந்த 2026-ஆம் ஆண்டு மட்டும் முதலமைச்சர் ஸ்டாலினின் கண்ணுக்குத் தெரிவது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

திமுக மக்களிடையே தனது செல்வாக்கை முழுமையாக இழந்துவிட்டதாகவும், தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிமைத் தொகை பெறுகின்ற பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து இந்தத் தொகை வழங்கப்படவில்லை என்றும், தோல்வி பயத்தினால் எடுக்கப்பட்ட இந்த முயற்சி மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 27 மாதம் தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி உரிமை தொகையை வழங்க வேண்டும் என்று சொன்னோம். 28 வது மாதத்தில் தான் இந்த உரிமை தொகையை கொடுக்கப்பட்டது.” என்று குற்றம்சாட்டினார்.