இது தெரியுமா? பிஎம் கிசான் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 3000 ஓய்வூதியம் கிடைக்கும்..!

PM கிசான் மான் தன் யோஜனா என்றால் என்ன?
இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஓய்வூதிய திட்டம். விவசாயிக்கு 60 வயதுக்கு பிறகு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ஆண்டுக்கு 36,000 ரூபாய் கிடைக்கும்.
18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் வயதுக்கு ஏற்ப 55 முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அரசாங்கமும் அதே தொகையை வழங்கும்.கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை. அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய திட்டத்தில் தானாகவே பதிவு செய்யலாம். சந்தா தொகையும் PM கிசான் நிதியிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.
எவ்வளவு செலுத்த வேண்டும், எவ்வளவு கிடைக்கும்?
PM கிசான் மான் தன் யோஜனாவில் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வயதுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இது 55 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரை இருக்கும்.ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். அத்துடன் 2000 ரூபாய் மூன்று தவணைகளும் தொடரும். அதாவது ஆண்டுக்கு 42,000 ரூபாய் கிடைக்கும்.