2018-ல் 20.4% ஆக இருந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் 2023-ல் 58.1% ஆக உயர்வு..!

 
1

குளோபல் டேட்டா எனும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: "ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பாரம்பரிய ரொக்கம் மற்றும் வங்கி பணபரிமாற்றத்துக்கு மாற்றாக ஈ-காமர்ஸ் எனும் மாற்று கட்டண முறை வேகமாக அதிகரித்து வருகிறது. யுபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொபைல் வாலட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இது பெரும்பாலும் யுபிஐ மூலம் இயக்கப்படுகிறது. க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் நிகழ்நேரத்தில் பணபரிமாற்றத்தை எளிதாக்குகிறது.

டிஜிட்டல் தீர்வுகள் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ளன. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் சீனா முன்னணியில் இருக்கிறது. சீனாவில் ஈ-காமர்ஸ் பரிவர்த்தனை 65 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2018 ல் இது 53.4 சதவீதமாக இருந்தது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியாவும் பின்தங்கவில்லை. 2018-ம் ஆண்டிலிருந்து மாற்று கட்டண முறைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை இந்தியா கொண்டிருக்கிறது. கடந்த 2018-ல் 20.4% ஆக இருந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் 2023-ல் 58.1% ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.