“ஈபிஎஸ் முடிவே எங்கள் முடிவு” - திண்டுக்கல் சீனிவாசன்

 
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..

கட்சியை ஒன்றிணைக்கும் விவகாரத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

திமுக தனித்து நின்றால் அதிமுக தனித்து போட்டியிட தயார்”- திண்டுக்கல்  சீனிவாசன்


கட்சியை பலப்படுத்தும் விதமாக அதிமுகவிலிருந்து விலகியவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்தால்தான் திமுகவை அகற்றி நல்லாட்சி கொடுக்க முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்தார். அவரது கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுக ஒன்றிணைவது குறித்து எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சென்று சந்தித்து உண்மையா?, இல்லையா? என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் அவரது முடிவை கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எடுப்பதே எங்கள் முடிவு. செங்கோட்டையன் கருத்து குறித்து ஈபிஎஸ் முடிவெடுப்பார்.. அவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” எனக் கூறியுள்ளார்.