“விஜய் என்ன உத்தமரா? வாங்கும் சம்பளத்தில் 75% கருப்பு பணம்” - திண்டுக்கல் சீனிவாசன்
வீட்டுக்கு வீடு ஓட்டு இல்லாதவங்கதான் விஜய்க்காக வருவாங்க என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்ற விஜயின் விமர்சனத்திற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “விஜய் ஊழல்வாதியா? இல்லையா? நீங்கள் வாங்கும் சம்பளம் நியாயமானதா? அது கறுப்புப் பணமா? வெள்ளை பணமா?வ் அர்ஜூனின் மாமனார் நேர்மையான வழியில் சம்பாதித்து வந்தவரா? அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் செங்கோட்டையன் சிறைக்கு சென்று வந்துள்ளாரே, அதற்கு என்ன பதில்? நேர்மையானவர், ஊழல் அற்றவர் என்பதை நிரூபித்துவிட்டு அதன்பிறகு விஜய் எங்களை விமர்சிக்கட்டும். அதிமுக, திமுக-வை விமர்சிக்கும் விஜய், பாஜக-வை பற்றி பேசாததது ஏன்? செங்கோட்டையனை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலை பற்றி விஜய் பேசலாமா? ஜெயலலிதாவின் கருணையினால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார். விஜய் என்ன உத்தமரா? படத்திற்கு வாங்கும் 75% பணத்தை கருப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளார். “விஜய் என்ன உத்தமரா? வாங்கும் சம்பளத்தில் 75% கருப்பு பணம். சிபிஐ விசாரணைக்கு பிறகு தவெக கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுக, திமுக ழல்ல் கட்சிகள் என்று பேசுகிறார். ஆனால் பாஜகவை குறை சொல்லவில்லை. இதற்கு என்ன காரணம்? விஜய் விளக்க வேண்டும்.” எனக் குற்றம்சாட்டினார்.


