குறுக்கு வழியில் முதலமைச்சரானவர் கருணாநிதி; ஆனால் எடப்பாடியார் அப்படி இல்லை- திண்டுக்கல் சீனிவாசன்
ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவரை ஒதுக்கி வைத்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி ஒரே பொதுச்செயலாளராக திறம்பட கட்சி நடத்தி வருகிறார் என திமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு கூட்டம் இன்று 16.11.24 மாலை திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அதிமுக முன்னால் அமைச்சரும் கழகப் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான தங்கமணி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “ஆர்ப்பாட்டம், போராட்டம் என அதிமுக கட்சிக்கு ஒத்துழைப்பதால் திமுக அலறிக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 520 வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அதில் பத்து கூட நிறைவேற்றவில்லை. இது பொய் இல்லையே. நீட் தேர்வை ஒழிப்பேன் என கூறினார்கள், ஆனால் அது ஒழிக்கவில்லை. விலைவாசி மின் உயர்வு, சொத்து விலை உயர்வு உயர்ந்துள்ளது. கடுமையான மின் உயர்வால் அத்தியாவசிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் எந்தவித விலைவாசி, வரி உயர்வில் கை வைக்கவில்லை. கடன் வாங்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
கடந்த 41 மாத திமுக ஆட்சியில் 3லட்சத்து.75 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். 13 ஆயிரத்து 500 கோடிக்கு நிதி ஒதுக்கீடு மகளிர் உரிமைக்கு, ஐம்பதாயிரம் கோடி டாஸ்மாக் வருமானம், மின்சார கட்டணம் 35 ஆயிரம் கோடி, சொத்து வரி பல்லாயிரம் கோடி பெறுகின்றனர். ஆனால் நல்லது செய்யவில்லை . திமுகவை அண்ணா ஆரம்பித்தார். ஆனால் எல்லா திட்டத்திலும் கலைஞர் பெயர் வைக்கின்றது இந்த அரசு. சர்வாதிகாரியாக இருந்தவர்கள் ஆட்சிகள் எப்படி எல்லாம் போய் உள்ளது என நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். திமுகவில் தியாகம் செய்தவர்கள் மூத்தவர்கள் உள்ளனர், அவர்கள் கப்சிப் என இருக்கின்றனர். கீழ் மட்டத்திலிருந்து உழைத்து முதல்வராக எடப்பாடி வந்துள்ளார். குறுக்கு வழியில் முதலமைச்சரானவர் கருணாநிதி; ஆனால் நம்முடைய எடப்பாடியார் கிளைச்செயலாளராக இருந்து இப்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.
ஓபிஎஸ், டிடிவி போன்றவரை ஒதுக்கிவிட்டு ஒரே ஒரு பொதுச் செயலாளராக திறம்பட கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். எடப்பாடிக்கு ஒன்றுமே தெரியவில்லை என ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் பேசுகிறார். எம்ஜிஆர் இருக்கும்போது மூன்று முறை ஜெயித்த கட்சி அதிமுக. அதிமுக அரசு திட்டங்கள் மூடுவிழா காணப்பட்டுள்ளன. புதிதாக காலையில் சோறு போட்டோம், மதியம் சோறு போட்டோம் என திமுகவினர் சொல்கின்றனர். எம்ஜிஆரே சத்துணவு போட்டவர் ஆவர் .புதிதாக இவர்கள் காட்டுகின்றனர்” என சாடினார்.