திண்டுக்கல் சீனிவாசனுக்கு அறுவை சிகிச்சை!!

 
srinivasan

சென்னை மருத்துவமனையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

dindigul srinivasan

அதிமுக முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சில நாட்களாக கழுத்து பகுதியில் இருந்த கட்டியின் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கட்டியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

tn

அதன்படி அறுவை சிகிச்சை மூலம் திண்டுக்கல் சீனிவாசனின் கழுத்தில் இருந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.