திண்டுக்கல் மாணவி நந்தினி தமிழ்நாடு முதலமைச்சருடன் சந்திப்பு

 
stalin stalin

திண்டுக்கல் மாணவி நந்தினி தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

student

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.  அதன்படி  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில்  மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.   இந்த சூழலில்   திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த  600க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளதால் மாணவிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

ttn

இந்நிலையில்  12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்து, வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.