கட்டில் உடைந்து தந்தை மகன் உயிரிழப்பு...திண்டுக்கல்லில் பெரும் சோகம்!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மற்றும் மமன் கட்டிலின் ஒருபக்க கம்பி உடைந்ததில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டையை சேர்ந்தவர் கண்ணன். இவர் வழக்கம் போல் வீட்டில் உள்ள இரும்பு கட்டிலில் தனது 10 வயது மகன் கார்த்திக்குடன் படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில், அந்த இரும்பு கட்டிலின் ஒருபக்க கம்பிகள் முறிந்து கட்டில் கீழ்நோக்கி சரிந்துள்ளது. அப்போது கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த கண்ணன் மற்றும் அவரது மகன் கார்த்திக் கழுத்தை அந்த இரும்பு கட்டிலின் கம்பி நெரித்ததில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த கண்ணன் மற்றும் அவரது மகன் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மற்றும் மமன் கட்டிலின் ஒருபக்க கம்பி உடைந்ததில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சாணார்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


