2021இல் திமுகவுக்கு ஓட்டு போட்டேன்; 2026இல் ஆதரவு இல்லை- பா.ரஞ்சித்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எல்லாக் கட்சிகளிலும் இருப்பவர்களுக்கு தொடர்பு இருப்பதாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், திமுகவிற்கு வாக்களித்தால் ஏதேனும் மாற்றம் வரும் என்று தான் வாக்களித்தேன். மக்களின் பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று தான் 2021-இல் திமுகவுக்கு ஓட்டு போட்டேன். ஆனால் திமுக, அதிமுக எந்த ஆட்சி வந்தாலும் தலித் மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. தலித்துகளின் பிரச்சனைகள் இரண்டாம் தரமாக பார்க்கப்படுவதில் எங்களுக்கு பெரிய விமர்சனம் உள்ளது.
தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை மீண்டும் நீடித்தால், திமுகவிற்கு அடுத்த ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன். இது ஒரு எச்சரிக்கை. 2026-ல் எனது முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கும்..? ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல கட்சிக்களுக்கு தொடர்பு உள்ளது. தேவைப்பாட்டால் ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடலாம்” என்றார்.