தமிழக பயணம் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது - ராஜமௌலி

 
rajamouli

தமிழகத்தின் முக்கிய கோயில்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த இயக்குநர் ராஜமௌலி, அந்த பயணம் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டிற்கு நீண்ட நாட்களாக சாலைப் பயணம் செய்ய விரும்பினேன். கோயில்களுக்குச் செல்ல விரும்பிய என் மகளுக்கு நன்றி, நாங்கள் பல்வேறு கோவிலகளுக்கு சென்றோம். ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தேன். நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் மற்றும் பாண்டியர்கள், சோழர்கள் நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது.


மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரத்தில் உள்ள காக்கா ஹோட்டல் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது... ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடையை அதிகரித்திருக்க வேண்டும். 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாயகம் சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.