#BREAKING திரையுலகினர் அதிர்ச்சி! பிரபல இயக்குநர் மரணம்
"வில் அம்பு" பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் (49) காலமானார்.
ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் ஆகியோரை வைத்து வில் அம்பு என்ற திரைப்படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் (வயது 49) புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். சுசீந்திரனின் உதவி இயக்குனரான இவர், 2016 ஆம் ஆண்டு வில் அம்பு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். இதனை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விக்ராந்த், யோகி பாபுவை வைத்து தி கில்லர் மேன் என்ற படத்தையும் இயக்கி, தயாரித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் , தற்பொழுது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுணாபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இயக்கத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

