"கடவுளின் குழந்தைகளான அவர்களை தடுப்பதும், தாக்குவதும் மன்னிக்க முடியாதவை" - ராமதாஸ் ஆவேசம்!!

 
PMK

உதவித் தொகையை உயர்த்தக் கோரி சென்னையில் கோட்டையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 1,500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

stalin

திமுக தேர்தல் அறிக்கையில் 1000 ஆக இருக்கும்  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் , இதுவரை உதவித் தொகை உயர்த்தப் அதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட சென்னை வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.3000ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு  ரூ.1500லிருந்து  ரூ.5000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பாமக ஆதரிக்கிறது! இந்தப் போராட்டத்திற்காக சென்னைக்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் ரயில் நிலையங்களில், ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி  காவல்துறை தடுத்து கைது செய்துள்ளது.

pmk

சென்னையிலும் கைது வேட்டை தொடர்ந்தது. காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது! மாற்றுத்திறனாளிகள் அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவது அவர்களின் உரிமை. கடவுளின் குழந்தைகளான அவர்களை தடுப்பதும், தாக்குவதும் மன்னிக்க முடியாதவை.  மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.