மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..! 7 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின்..!!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி சென்றபோது ஏற்பட்ட திடீர் தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஜூலை 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் , 3 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்பேரில் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்தும், அதுதொடர்பான பணிகள் குறுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இருப்பினும் ஜூலை 24ம் தேதி முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது, இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, ஆஞ்சியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 7 நாட்களுக்குப் பிறகு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து, அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளை தொடரவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து வீடு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர் .


