"கூடுதல் விலைக்கு மது விற்றால் பணிநீக்கம்" - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை!!

 
Muthusamy

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் பணிநீக்கம் செய்யப்படும் என்று  அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tasmac


தமிழகத்தில் 500 மதுக்கடைகள் கடந்த 22ஆம் தேதி முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால், அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் சில டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தின் விலையை 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

tasmac

இந்நிலையில் டாஸ்மாக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மதுபானங்களை விற்க வேண்டும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கினால்,  பணிநீக்கம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.  டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் முத்துசாமி இவ்வாறு கூறியதாக தெரிகிறது. டாஸ்மாக் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல; நடைபெற்றுக் கொண்டிருக்கும் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை அரசின் நோக்கம்.  டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்த நினைக்கிறோம்.. அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.